“சென்னை- சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Photo: IndiGO Official Twitter Page

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines). இந்த நிறுவனம், இந்தியாவின் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஜம்மு- காஷ்மீர், திருவனந்தபுரம், அமிர்தசரஸ், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

Strides டாக்ஸி, Premier டாக்ஸி நிறுவனங்கள் இணைக்கப்படுவதாக ‘SMRT’ அறிவிப்பு!

அதேபோல், இந்தியாவில் இருந்து துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

குறிப்பாக, சர்வதேச விமான சேவைகளை வழங்கி வரும் இந்திய விமான நிறுவனங்களில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய பங்கை வகிக்கிறது.

அந்த வகையில், சென்னை, திருச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் மே 23- ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி கூடுதலாக ஒரு நேரடி விமான சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டையொட்டி, லிட்டில் இந்தியாவில் பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!

ஏற்கனவே, சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி இரண்டு நேரடி விமான சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் வழியாக சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

கூடுதல் விமான சேவையால் சிங்கப்பூருக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.