சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை குறித்த விரிவான தகவல்!

Photo: Air India

டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் (Air India), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில், குறிப்பாக சென்னை, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இதில், ஒரு விமான சேவை நேரடி விமான என்ற போதிலும், மற்ற விமான சேவைகள் சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லி, மும்பை வழியாக சிங்கப்பூருக்கு வழங்கி வருகிறது.

1 வயது சிறுவனைக் கடித்து தின்ற முதலை: காப்பாற்ற முயன்ற தந்தைக்கு பலத்த காயம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

சென்னை, சிங்கப்பூர் இடையே தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விபத்தில் சிக்கி ஒருவர் பலி: கவனக்குறைவாக வாகனம் ஓட்டியவர் கைது

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.