சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX688 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து சென்னை IX687 என்ற விமானத்தையும் தொடர்ந்து இயக்கி வருகிறது.

பெண்ணிடம் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி – ஒருவர் கைது

எனினும், இந்த வழித்தட விமான சேவை தினசரி விமான சேவை கிடையாது. வாரந்தோறும் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் விமான சேவையை வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 7,848.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கனமழை: தானா மேரா MRT நிலையம் முன் வெள்ளப்பெருக்கு – கட்டுமான தள ஊழியர்கள் உதவி

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.