சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India

சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் (Air India) தொடர்ந்து தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இவ்வழித்தடத்தில் ஒரு நேரடி விமான சேவையையும், சென்னையில் இருந்து டெல்லி, மும்பை வழியாக சிங்கப்பூருக்கு தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவையையும் வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடையா? – ஐநா சபையின் சட்டங்களை மீறினால் அபராதம்

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மோசடி செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் – மூலதனம் ஒதுக்க OCBC வங்கி உத்தரவு

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.