சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India

டாடா குழுமத்துக்கு சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம் (Air India), சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும், நேரடி விமான சேவையையும், டெல்லி, மும்பை வழியாக சிங்கப்பூருக்கு இரண்டு விமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாள்தோறும், இவ்வழித்தடத்தில் மூன்று விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

கடுமையான நெருக்கடி, செலவினங்கள் அதிகரிப்பு – “சம்பள உயர்வு வேண்டும்” கோரிக்கை வைக்கும் ஊழியர்கள்!

இந்த நிலையில், சென்னை, சிங்கப்பூருக்கு இடையேயான விமான சேவைக்கான ஜூன், ஜூலை மாதங்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in/ என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் இருந்த இருவர்… சுமார் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தட்டி தூக்கிய போலீஸ்

தற்போது, சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.