செல்பி எடுப்போருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, அபராதம் கட்டாயம் – எச்சரிக்கை

சென்னை: ரயில் விதிமுறைகளை மீறி செல்பி எடுப்போருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விதியை பொருட்படுத்தாமல் ரயில் தண்டவாள பாதையை கடப்பதால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருடத்தில் மட்டும் 1800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்

அனைத்துக்கும் முக்கிய காரணமாக மொபைல் போன் இருந்து வருகிறது, அதாவது போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடப்பது மற்றும் ஓடும் ரயில் அருகே செல்பி எடுப்பதால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன.

முறையாக சுரங்க பாதை வழியாக ரயில் பாதைகளை கடக்க வேண்டும், ரயிலில் நின்று பயணம் செய்வது, அதன் அருகே நின்று செல்பி எடுப்பது கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மீறினால் 6 மாதம் சிறைத் தண்டனை, 1000 ரூ. அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் லாரி, டாக்ஸி, கார் என 6 வாகனங்கள் மோதி விபத்து: தீப்பற்றி எரிந்த கார் – ஐந்து பேர் மருத்துவமனையில்..