சென்னை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய பிரான்ஸ் விமானப் படை விமானம்!

Photo: Chennai International Airport Official Twitter Page

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் (Chennai International Airport) பிரான்ஸ் நாட்டின் விமானப் படை விமானம் திடீரென தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த கொடூரம்: துப்பாக்கி சுட்டு பலியான போலீஸ் அதிகாரி

பிரான்ஸ் நாட்டின் Armée de l’Air என்ற விமானப் படை விமானம் (French Air Force), சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருந்ததால், திடீரென சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை விமானம், கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று தரையிறங்கியது. பின்னர் எரிபொருள் நிரப்பியதைத் தொடர்ந்து, விமானம் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் ஏர்பஸ் நிறுவனத்தின் சார்பில் ராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் குறைந்த விலையில் 40 ஆண்டு காலம் உணவு வழங்கிய கடை மூடல்.. ஓய்வு எடுக்க முடிவு செய்தார் 78 வயதான உரிமையாளர்

பிரான்ஸ் விமானப் படையின் விமானத்தை பயணிகள், விமான நிலையத்தின் பணியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனிடையே, எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.