சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 4 அரிய வகை குரங்குகள் பறிமுதல்!

Photo: Chennai Customs Official Twitter Page

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்ட கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

“65 வயது முதியவரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

அந்த வகையில், மார்ச் 19- ஆம் தேதி அன்று மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து AK13 என்ற எண் கொண்ட ஏர்ஏசியா (AirAsia) விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த வினோத் (வயது 28), விக்னேஷ் (வயது 34) ஆகியோர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில் ‘மர்மமோசெட்’ என்ற அபூர்வ வகை வெளிநாட்டு குரங்குகள் 4 இருந்தன. மேலும், முறையான அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக குரங்குகளைக் கொண்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஸ்ரீ ராமர் கோயிலில் நடந்த மஹா சண்டி யாகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

இதைத் தொடர்ந்து, அந்த அரியவகை குரங்குகள் மலேசியாவுக்கு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டது. எனினும், அந்த இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.