சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்!

Photo: Chennai Customs Official Twitter Page

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளது சர்வதேச விமான நிலையம் (International Airport, Chennai). உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக, இங்கிருந்து உலக நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகின்றன விமான நிறுவனங்கள். எப்போதும் பரபரப்பாக இருக்கும், இந்த விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம், உயிரினங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றைக் கடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளையும், அவர்கள் கொண்டு வரும் உடமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 25- ஆம் தேதி அன்று துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சென்னையைச் இளைஞரைச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து தனியறைக்கு அழைத்துச் சென்று, அவர் கொண்டு வந்த உடைமைகள் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

Photo: Chennai Customs Official Twitter Page

அப்போது, அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சுங்கத்துறை சட்டப் பிரிவு 1962- ன் அடிப்படையில் கடத்திக் கொண்டு வரப்பட்டத் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த இளைஞரிடம் இருந்து 541 கிராம் மதிப்புள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்ததாகவும், அதன் மதிப்பு ரூபாய் 25.47 லட்சம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல், நவம்பர் 21- ஆம் தேதி அன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திருந்த ஒருவரைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன், அவர் கொண்டு வந்த சூட்கேஸ் பெட்டியையைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதில், துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணம் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அதனை சுங்கச்சட்டம் 1962- ன் கீழ் கடத்தப்படவிருந்த வெளிநாட்டு பணத்தைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் விலையுயர்ந்த நகரம் “சிங்கப்பூர்” – ஊழியர்களால் சமாளிக்க முடிகிறதா?

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு ரூபாய் 12.33 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை சென்னை மண்டல சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.