‘சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- குளிர்கால பயண அட்டவணையை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இந்த நிலையில், இந்த வழித்தட விமான சேவைகளுக்கான குளிர்கால பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது விமான நிறுவனம்.

SCDF ஆம்புலன்ஸ், 2 கார்கள் விபத்து: 11 மாதக் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

அதன்படி, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையையும், சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் விமான வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்கால பயண அட்டவணை வரும் அக்டோபர் மாதம் 30- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு கடந்த அளவில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள்: சந்தேகத்தில் சிக்கிய 13 பேர் கைது

பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page