சென்னை To சிங்கப்பூர் தினசரி VTL விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம் – “குடும்பங்களை ஒன்றிணைக்கும் அனுமதி” – SIA

(Photo: Indian Express)

சென்னை, டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூருக்கு தினசரி விமானங்களுக்கான முன்பதிவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தொடங்கியுள்ளது.

இந்த விமான சேவை வரும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர தயாராகும் பயணிகள்: சுமார் 1,000க்கு மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி

ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்ட இந்த விமானங்கள், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையதளத்தில் VTL விமானங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று (நவம்பர் 24) SIA தெரிவித்துள்ளது.

“இந்த ஏற்பாடுகள், குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.”

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக பயணத்திற்கான கோரிக்கையையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்றும் SIA கூறியது.

தற்போது, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க சுமார் 1,126 பயணிகளுக்கு VTL ஏற்பாட்டின்கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட சில நாடுகளுக்கான சிங்கப்பூர் வருகை அனுமதி விண்ணப்பங்கள் கடந்த திங்களன்று தொடங்கியது. மேலும் வரும் நவம்பர் 29 அன்று பயணிகள் சிங்கப்பூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி!