‘சென்னை, சிங்கப்பூர் இடையே VTL விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பிப்ரவரி மாத பயண அட்டவணை குறித்து பார்ப்போம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines), இந்தியாவின் சென்னை, மும்பை, கொச்சி, டெல்லி ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் VTL விமான சேவையை வழங்கி வருகிறது. அதேபோல், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் Non- VTL விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இரண்டு நாட்களில் மூன்று பேரிடம் இருந்து சுமார் 7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – Industrial buildingல் 3 பேர் கைது!

குறிப்பாக, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் என இரு மார்க்கத்திலும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான பயண அட்டவணை குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, சிங்கப்பூரில் இருந்து சென்னை SQ 528 என்ற பெயரில் விமானம் இயக்கப்படும் நிலையில், வரும் பிப்ரவரி மாதத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவையை வழங்கவுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு SQ 529 என்ற பெயரில் விமானம் இயக்கப்படும் நிலையில், வரும் பிப்ரவரி மாதத்தில் 1- ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை விமான சேவை இல்லை என்றாலும், மற்ற நாட்களில் விமான சேவையை வழங்கவுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஊழியர்… வலுக்கட்டாயமாக மடக்கி வண்டியில் ஏற்றிசென்ற மர்ம நபர் – திக் சம்பவம்

இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. பயணிகள் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.