சிங்கப்பூரில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு விருது – நேரத்தை மிச்சப்படுத்தும் புதுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

MHA Awards Singapore

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் கடல்துறையில் புதுமையான புரட்சியை ,சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் சமூகத் தீர்வுகள் பிரிவுக்கான உதவித்தலைவர் ஸ்ரீராம் ராமானுஜம் ஏற்படுத்தி வருகிறார்.சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தில் 21 ஆண்டுகளாக பணியாற்றும் இவரது திறமைக்கு சிங்கப்பூர் கணினிச் சங்கத்தின் ‘தொழில்நுட்பத் தலைவர்’ விருதைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீராம்,1996-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று பின்னர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்றார்.தற்போது சிங்கப்பூரில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய அவர் சாதாரண ஊழியர்களும் மிகுந்த பலனடைவதால் இதுபோன்ற தீர்வுகளை உருவாக்குவதில் தொழில்நுட்பர்கள் முனைப்பு காட்டுவது நல்லது என்றார்.

இவரது “அறிவார்ந்த தளவாட சுற்றுச்சூழல்” திட்டத்தில் Smart booking போன்ற தளங்கள் உள்ளடங்கும்.இது சிங்கப்பூரின் சரக்கு வாகனங்கள்,பணிமனைகள்,முனையங்கள் ஆகியவற்றை இணைக்கிறது.இதன்மூலம் முன்பதிவு செய்வது எளிதாகிவிடுகிறது.

சில சரக்கு வாகன பயணமுறையில் சீரற்ற நிலை இருந்ததை சுட்டிக்காட்டினார்.சிலநேரங்களில் 15 நிமிடங்களில் முடிய வேண்டிய சரக்கு லாரியின் பயண வேலைகள் ,காத்திருப்புகள் காரணமாக இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறது.இதனால் நேரம் வீணடிக்கப் படுவதோடு, லாரிகள் நகராமல் இருந்தாலும் எரிபொருளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்ச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இத்திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கி இரண்டு மாதத்திலேயே இத்தளத்தின் முதல்வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.பத்துப்பேர் அடங்கிய தமது குழுவினருடன் இணைந்து இந்த தளவாடத்தை உருவாகியுள்ளார்.