சிங்கப்பூரில் சிக்கனுக்கு கிராக்கி – இனி சிக்கன் பிரியர்களின் நிலை என்ன?

chicken halt in malaysia singapore poultry sellers

மலேசியா எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கோழி ஏற்றுமதியை நிறுத்த உள்ளதாக திங்கள் கிழமை அன்று (May 23) அறிவித்தது. மலேசியாவிடமிருந்து பெரும்பாலான கோழிகளை சிங்கப்பூர் இறக்குமதி செய்து வருகிறது.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள மலேசியாவின் அறிவிப்பு சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.சில கோழி விற்பனையாளர்கள் அவர்களது கடைகளை தற்காலிகமாக மூட நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மலேசியா கோழி ஏற்றுமதியை நிறுத்தும்போது ,சில கோழி விற்பனையாளர்கள் 10% முதல் 30% வரை விலையை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் மற்ற இறைச்சி வகைகளுக்கு திரும்புவோம் அல்லது பிற நாடுகளிலிருந்து உறைந்த கோழியை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Bedok North Market and Food Centre, Tiong Bahru Market மற்றும் Geylang Serai Market ஆகிய சந்தைகளில் உள்ள இறைச்சி விற்பனையாளர்கள் ,மலேசியாவின் இந்த நடவடிக்கை தங்களது வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்று செவ்வாய்க்கிழமை அன்று (May 24) ஊடகங்களிடம் தெரிவித்தனர். கோழி விற்பனையாளர்கள் பெரும்பாலும் Causeway- யிலிருந்து கோழி வினியோகித்தை பெறுகிறார்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து சுமார் 73000 டன் கோழிகளை இறக்குமதி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிக இயக்கச் செலவுகள் மற்றும் தொற்றுநோய் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கோழிப்பண்ணைகளுக்கான விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக கோழி விநியோகிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருக்கும்.