கோழிகளின் அதிகபட்ச விலையே இவ்ளோதோன் இருக்கணும் – மலேசிய பிரதமர் விலை உச்சவரம்பில் முடிவு

chicken halt in malaysia singapore poultry sellers

மலேசியாவில் கோழிகளின் விலை உச்ச வரம்பு அறிவிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.கோழிகளின் விலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.தற்போது உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோ கோழி 8.90 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோழிகளுக்கான தீவனத்தின் விலை ஏறிவிட்டதால்,இனி இந்த விலைக்கு கோழிகளை விற்க முடியாது என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து எதிர்வரும் ஜூலை 1 முதல் சந்தை வியாபாரிகளே விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்லியிருந்தது.

இந்நிலையில் நேற்று பிரதமர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.கோழிகளின் விலையில் புதிய உச்சவரம்பு அறிவிக்கப்படும் என்றார்.அதிகரித்து வரும் வாழ்கைச் செலவினத்தால் ,மக்களுக்கு கோழி விலையால் கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் புதிய உச்சவரம்பு வெளியிடப்பட உள்ளதாக அவர் கூறினார்.

கோழிகளுக்கான அதிகபட்ச விலை என்ன என்பதை உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் ரோனல்ட் அறிவிப்பார்.உள்நாட்டில் கோழி பற்றாக்குறையைச் சமாளிக்கவும் ,விலையை நிலைப்படுத்தவும் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்தது.அதனால் சிங்கப்பூரின் கோழி விநியோகம் பாதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் கோழி விநியோகத்தை சமாளிக்க இந்தோனேசியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்கிறது.சில நாட்களுக்கு முன்னர் ஏற்றுமதித் தடையில் சில தளர்வுகளை மலேசியா அறிவித்திருந்தது.

கம்போங் மற்றும் கறுப்புக் கோழிகளை இறக்குமதி செய்ய சிங்கப்பூருக்கு தடையில்லை என்று கூறியது.இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் விற்பனையாளர்கள் இந்த இரண்டு வகைக் கோழிகளையும் வாங்கி வருகின்றனர்.