திடீரென சிங்கப்பூரில் “சிக்கன் ரைஸ்” தட்டுப்பாடு ஏன்? உணவுக்காக பிற நாடுகளை நம்பி இப்படியொரு ஏமாற்றம்!

கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் விலைவாசி உயர்ந்துவருகிறது.

அதனை சமாளிக்க சில ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் முக்கியமான உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏற்றுமதி தடை விதித்துள்ளன.

சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவும் தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சியின் அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் மத்தியில் இந்த நடவடிக்கைகள் கவலையை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, 90 சதவீத உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடான சிங்கப்பூருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் எடுத்துக்கொள்ளும் மொத்த கோழி இறைச்சியில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மலேசியா கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்தவுடன்,  சிக்கன் ரைஸ் கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். இந்த கடைகள் சிங்கப்பூரின் ஒவ்வொரு ஃபுட் கோர்ட் சந்தைகளிலும் இடம்பெற்றிருக்கும்.

இந்த முறை கோ ழி இ றைச்சிக்கு இந்த நிலைமை ஏ ற்பட்டிருக்கிறது. அடுத்த முறை வேறு எதற்காவ து இ ந்த நிலைமை ஏ ற்படும். அதற்கு நாம் தயாராக இ ருக்க வேண்டும்,” என பிரதமர் லீ ஷியன் லான் தெரிவித்துள்ளார்.

சிக்கன் ரைஸுக்கு பயன்படுத்தப்படும் கோழிகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு உயிருடனேயே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன்பின் அவை சிங்கப்பூரில் அறுத்து சமைக்கப்பட்டு பின்னர் பரிமாறப்படுகின்றது.

கோழி இறைச்சிக்கான ஏற்றுமதிக்கு மலேசியா அரசு தடை விதித்துள்ள  நிலையில், இனி அதற்கு சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், “உள்நாட்டில் விலைவாசி மற்றும் உற்பத்தி நிலையாகும் வரை” இந்த தடை நடைமுறையில் இருக்கும்.