ஏன் இங்கு கோழிகள் வளர்க்கக் கூடாது? – வீவக வீடுகளில் கடுமையாகும் விதிமுறைகள்

chicken pc-pixabay

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் கோழிகளை வளர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.கோழிகள் ஏன் வீவக வீடுகளில் வளர்க்கப்படக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ்,”பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் வசதிக் குறைவுகளை நிர்வகிக்கவும் அவ்வாறு பின்பற்றப்படுகிறது” என்று கூறினார்.

வீவக வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படுவதாகப் புகார்கள் வந்தால்,கழக அமைப்பு மற்ற அமைப்புகளுடன் இணைந்து உடனடியாக வீட்டு உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளும்.கோழிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

வியாபாரத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட காரணத்துக்காக கோழிகளை வளர்ப்போர் ஒரு வளாகத்தில் பத்து கோழிகளை மட்டுமே வளர்க்க அனுமதி இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனியார் மற்றும் வீவக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளால் ஏற்படும் துர்நாற்றம்,சத்தம் பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

பறவைக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்தக் கட்டுப்பாடு இருப்பதாகக் கூறிய அவர் வீவக வீடுகளுக்கான விதிமுறைகள் மேலும் கடுமையானது என்று குறிப்பிட்டார்.