‘கொக் கொக்’ கோழிகளை கைவிடும் சிங்கப்பூரர்கள்! – தானே இரை தேட முயன்று நாய்களிடம் சிக்கும் கோழிகள்

-chicken-

சிங்கப்பூரில் கோழி வளர்ப்பதற்கு போதுமான இடவசதிகள் இல்லாததால் பெரும்பாலானோர் வளர்க்கப்படும் கோழிகளை கைவிடுவதாகக் கூறப்படுகிறது.சென்ற ஆண்டை விட இந்தாண்டில் சமீப காலங்களில் கோழிகள் கைவிடப்படுவது 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அவற்றை மீட்போர் கூறுகின்றனர்.

இவ்வாறு கைவிடப்படும் கோழிகளை மீட்பதற்கு சில அமைப்புகள் செயல்படுகின்றன.கடந்த ஜூலை மாதம் களத்தில் இறங்கிய The Rescue, Rehome and CareSG அமைப்பு இதுவரை சுமார் 100 கோழிகளைக் காப்பாற்றியிருக்கின்றது.

கைவிடப்படும் கோழிகள் நாய்களாலும் பூனைகளாலும் தாக்கப்படுகின்றன.கோழிகளுக்கு தேவையான புகலிடங்களிலும் சிக்கல்கள் நிலவுகின்றன.

குடியிருப்புகளில் கோழிகள் வளர்க்கப்படுவதால் அவை எழுப்பும் சத்தம் மற்றும் அவற்றிலிருந்து வரும் துர்நாற்றம் போன்றவை மற்ற குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு அளிக்கிறது.

இது குறித்த புகார்கள் அதிகமாகின்றன.எனவே,20 கோழிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்போது 10 கோழிகளை வைத்திருக்க மட்டுமே அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக அதிகமான கோழிகளை வைத்திருக்க வேண்டுமானால் அவற்றுக்குத் தடுப்பூசி போட வேண்டும்.செலவுகள் அதிகமாவதால் பெரும்பாலானோர் கோழிகளை கைவிடுகின்றனர்.