காரில் சிக்கிக்கொண்ட குழந்தை… துரிதமாக செயல்பட்டு பத்திரமாக காப்பாற்றிய SCDF வீரர்கள்!

scdf-child-locked-car
Quangphu194 / TikTok

காரில் சிக்கிக்கொண்ட குழந்தையை அதன் கண்ணாடிகளை உடைத்து வெற்றிகரமாக காப்பாற்றியது சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை (SCDF).

இந்த சம்பவம் கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று காலை 11:30 மணியளவில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. அந்த குழந்தை தனது தாய் மற்றும் அவர்களின் வீட்டு பணியாளர்களுடன் காரில் இருந்துள்ளது.

34 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடிய ராமநாதபுரம் மாணவர்கள்; சிங்கப்பூரில் இருந்து விழாவுக்கு சென்ற ஊழியர் – நெகிழ்ச்சியான தருணம்!

தாயும் பணியாளரும் வாகனத்தில் இருந்து இறங்கும் போது, ​​அதன் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டது, இதில் கார் சாவியும் குழந்தையும் உள்ளேயே சிக்கொண்டன.

இதனை அடுத்து, சிக்கிக்கொண்ட குழந்தை அழுததாகவும், தாய் தனது குழந்தையை ஜன்னல்கள் வழியாக ஆறுதல்படுத்த முயன்றதாகவும், மேலும் அவர் உதவி வேண்டி சத்தம் போட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தகவல் கிடைத்து வந்த SCDF வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காரைச் சுற்றி திரண்டிருந்தனர்.

SCDF வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வீடியோக்கள் TikTok செயலி வாயிலாக வெளியிடப்பட்டன.

அந்த வீடியோவில், கண்ணாடி ஜன்னல் ஒன்றை சுத்தியல் போன்ற உபகரணத்தைப் பயன்படுத்தி SCDF அதிகாரி அடிப்பதை காண முடிந்தது.

பல அடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைந்தது, அதன் பின்னர் அதிகாரி வெற்றிகரமாக கார் கதவைத் திறந்து குழந்தையை காப்பாற்றினார்.

இந்த முழு மீட்பு நடவடிக்கைகளுக்கும் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆனது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்-திருச்சி விமானம் தாமதம்: தொடரும் தாமதம், காரணம் தான் என்ன?