9 வயது பேத்தியிடம் அத்துமீறிய தாத்தாவுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை!

spf-officer-dies-facebook-post
File Photo Via The Singapore Police Force

 

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்காக பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் ஒன்பது வயது சிறுமியைப் பார்த்துக்கொள்ளுமாறு தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஆனால் சிறுமியை பார்த்துக் கொள்ள தவறிய அந்த தாத்தா சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டுள்ளார். சிறுமியின் ஆறு சகோதரர்களும் பக்கத்துக்கு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, சிறுமியை தனது அறைக்கு வர சொல்லி அந்த முதியவர் சிறுமியைத் தொட்டு தகாத முறையில் நடந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2012- ஆம் ஆண்டுக்கும், 2013- ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறுமியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக தகவல் கூறுகின்றன. அதன் பிறகு, கடந்த 2014- ஆம் ஆண்டில் சிறுமியின் தயார் விடுதலையாவதற்கு முன்னதாக, அந்த சிறுமியின் தாத்தா தனது தவறான செயலை நிறுத்திவிட்டார்.

 

தற்போது சிறுமியின் தாத்தாவுக்கு 69 வயதாகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயதாகிறது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான தகவல் காவல்துறைக்கு தெரிய வரவே, அவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் தாத்தா மட்டுமின்றி, பக்கத்து வீட்டுக்காரரும் சிறுமியிடம் அத்துமீறியது விசாரணையில் தெரிய வந்தது.

 

இது தொடர்பான வழக்கு விசாரணையும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் என்ஜி பிறப்பித்தத் தீர்ப்பில், சிறுமியின் தாத்தாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பக்கத்து வீட்டு ஆண் நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 16 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

இதனிடையே, “தன் செயலை எண்ணி சிறுமியின் தாத்தா வருந்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் அவருக்கு உண்டு” என்ற மனநல கழகத்தின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.