கொஞ்சம் சந்தேகம்தான்! – சீனாவிலிருந்து வந்தால் பரிசோதிக்கப் படுவது உறுதி!

flights from china travellers pcr test
சீனாவில் மீண்டும் Covid-19 வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கான நடவடிக்கைகளை மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஜாலிஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் விமானங்கள் அனைத்திற்கும் கழிவுநீர் பரிசோதனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.சீனாவிலிருந்து வரும் விமானத்தின் கழிவுநீர் மாதிரிகள் தேசிய பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்படும்.
அங்கு PCR பரிசோதனை செய்யப்பட்டு,நேர்மறை முடிவுகள் கிடைத்தால் உருமாறிய திரிபுகளைக் கண்டறிய மரபணு வரிசைக்கு அனுப்பப்படும்.மேலும்,அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள்.
Covid-19 தொற்றின் அறிகுறிகள் உடைய நோயாளிகள் மற்றும் கடந்த 2 வாரத்திற்குள் சீனாவுக்குச் சென்றவர்கள் இதேபோல் பரிசோதிக்கப்படுவார்கள்.நேர்மறை முடிவுகளைப் பெறுபவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்படும்.

சீனா அதன் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் வாரங்களில் நீக்கும்போது, எதிர்பார்க்கப்படும் பயணிகளின் வருகைக்கு முன்னதாக நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயமாக உள்ளது.
சீனாவில் Covid வழக்குகள் அதிகரித்து வருவதாகத் தோன்றுவதால்,பல நாடுகள் உறுதியான முடிவை எடுக்காமல் உள்ளன.சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு எல்லைக்கட்டுப்பாட்டு முறையை மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.