சிங்கப்பூர்- சீனா இடையே 19 ஒப்பந்தங்கள் -சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்த சீன துணைப் பிரதமர்

china singapore
சீனாவின் துணைப் பிரதமர் ஹான் ஜெங் நவம்பர் 2 அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ சியென் லூங்கை சந்தித்தார்.சிங்கப்பூர்-சீனா இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதர்கான கூட்டத்தில் 19 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மறுநாள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இருதரப்பு வருகைகள்,மெய்நிகர் சந்திப்புகள் போன்றவை நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வெளிப்படுத்துவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) புதன்கிழமை ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து திரு.ஹானின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நிதி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற பாரம்பரிய துறைகளில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை தலைவர்கள் வரவேற்றனர் என்று MFA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்-சீனா கூட்டுமன்றத்தின் 18-வது இருதரப்பு ஒத்துழைப்பு கூட்டத்தின் மூலம் சிங்கப்பூரின் தேவைகளுக்கேற்ப மற்றும் பொருளாதாரத்தை உருமாற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்பவும் புதிய பாதையை உருவாக்கியுள்ளது.