வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் (வீடியோ) – தொடர்கதையாகும் விழும் சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) 28 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சைனாடவுன் பாயிண்ட் மாலின் நான்காவது மாடியில் இருந்து 2வது மாடியில் விழுந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அன்று சுமார் 3.30 மணியளவில் 133 நியூ பிரிட்ஜ் சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) ஊழியரை அழைத்துச் சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சிங்கப்பூரில் புதிதாக 845 பேருக்கு COVID-19 பாதிப்பு – வெளிநாட்டு ஊழியர் விடுதியில் 16 பேர் உறுதி

அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுயநினைவுடன் இருந்தார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இவர் Vectron Construction நிறுவனத்தில் பணிபுரியும் அவர் பங்களாதேஸ் ஊழியர் என்றும் மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் திங்களன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்-யிடம் கூறினார்.

மேலும், சம்பவத்தை தொடர்ந்து நான்காவது மாடியில் உள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!