உலகப்புகழ் பெற்ற ஒரு பகுதி அழுக்கடைந்து காணப்படுவதாக வேதனை தெரிவித்த TikTok பயனர் !

chinatown singapore

சீனாவைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் மாணவர் ஒருவர் ஜூலை 16 அன்று வெளியிட்ட TikTok வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் இந்த வீடியோ 200,000 பார்வைகளை கடந்துள்ளது.

 

அந்த வீடியோவில், சிங்கப்பூரில் மிகவும் இடைஞ்சலான மற்றும் அழுக்கான இடமாக சைனா டவுன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.  தொற்றுநோய்க்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் சுகாதார நிலை சகிக்க முடியாததாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

 

இந்தப் பகுதி உலகப் புகழ்பெற்ற ஒரு பகுதியாக எப்படிக் கருதப்படுகிறது என்பதை என்னால் கற்பனை ‘செய்து கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் தூய்மையில் குறைபாடுகள் இருக்கும் சில பகுதிகள் இருக்கும்,  ஆனால் சிங்கப்பூரில் உள்ள சைனாடவுன் சுகாதாரக் குறைபாட்டுடன் உள்ளது.

சைனாடவுன் உண்மையில் மக்கள் சீனாவைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சாளரம். வெளிநாட்டு சீனர்கள் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கும் வீட்டில் இருப்பது போல் உணர்வதற்கும் ஏற்ற ஒரு இடமாகும். இது சீனர்களின் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

 

மேலும் தன் பள்ளி நண்பர்கள் சைனாடவுனில் சாப்பிடுவார்கள், ஏனெனில் உணவு மற்றும் சுவையான உணவுகள் கிடைப்பதென்னவோ உண்மை தான் என்றும் கூறியுள்ளார்.