சிங்கப்பூரில் 4 சொகுசு வீடுகளை வாங்கிய வெளிநாட்டவர்… மதிப்பு சுமார் S$60 மில்லியன்!

Keith Tan/Google Maps

ஆர்ச்சர்ட் பவுல்வர்டில் அமைந்துள்ள ஃப்ரீஹோல்ட் காண்டோமினியம் 3 ஆர்ச்சர்ட் பை-தி-பார்க்கில் உள்ள நான்கு வீடுகளை சீன நாட்டவர் ஒருவர் வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன் மொத்த விலை S$60 மில்லியன் என்றும், அந்த தொகையை செலுத்தி அவர் அதனை வாங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நற்செய்தி… இனி ஒரு நிமிடத்தில் பணத்தை அனுப்ப முடியும்

அதாவது மூன்று வீடுகளின் ஒவ்வொன்றின் விலை சுமார் S$12 மில்லியன் என்றும், நான்காவது வீட்டின் விலை S$20 மில்லியன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய அளவில் இருக்கும் அந்த வீடுகளின் ஒரு சதுர அடி விலை S$3,600 முதல் S$3,700 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூரோங் காபிஷாப்பில் சண்டை: ஆண், பெண் இருவர் கைது