சாலையின் நடுவே நாய் ஒன்று பிடிபடாமல் அதன் உரிமையாளரை அலைக்கழிக்கும் காணொளி!

Choa Chu Kang road dog chase
(Photo Credit: Mothership)

சிங்கப்பூரில் நேற்று (ஜன. 19) இரவு 10:20 மணியளவில் சோவா சூ காங்கில் (Choa Chu Kang) சாலையில் பஞ்சுபோன்ற வெள்ளை நாய் ஒன்று அதன் உரிமையாளரை அலைக்கழிக்க செய்தது.

அவர் நாயை துரத்தி பிடிக்கும் காணொளி, கீட் ஹாங் LRT நிலையத்திற்கு அருகிலுள்ள சோவா சூ காங் அவென்யூ 1 மற்றும் சோவா சூ காங் வே சந்திப்பில் நின்ற வாகனத்தின் முன்புற கேமராவில் பதிவானது.

சிங்கப்பூரில் 30க்கும் அதிகமான தடுப்பூசி நிலையங்கள் – நாள் ஒன்றுக்கு 70,000 மேற்பட்டோருக்கு தடுப்பூசி

போக்குவரத்து சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியபோது, ​​வாகனங்கள் முன்னோக்கி நகரத் தொடங்கின. அப்போது சாலையின் வெற்று இடத்தில் அங்குமிங்கும் அந்த நாய் ஓடிக்கொண்டிருந்தது.

நாயை எப்டியாவது பிடித்துவிட வேண்டும் என்று உரிமையாளர் அதனுடன் சேர்ந்து அங்கும் இங்கும் ஓடி கொண்டிருப்பதை காணமுடிகிறது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து டோக்கன்-களை நிறுத்தவுள்ள சிங்கப்பூர் DBS வங்கி!

​​துரதிர்ஷ்டவசமாக, அது லாரியின் பாதையை நோக்கி ஓடியது. நல்ல வேலையாக அதற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பின்னர், அங்கு இருந்த சிலர் அதனை மீட்க உதவி செய்தனர், அவர்களால் நாயைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், LRT நிலையத்திற்கு அருகிலுள்ள நடை பாதையில் நாயைக் கொண்டு செல்ல முடிந்தது.

உரிமையாளர் மற்றும் நாய் இருவரும் நலமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

சிங்கப்பூரில் பேருந்துடன் விபத்தில் சிக்கிய பெண் – மருத்துவமனையில் அனுமதி!