சிங்கப்பூரர்களுக்கு அதிகரித்த கொழுப்பு! – பண்டிகையை முன்னிட்டு பதார்த்தங்களை ஒரு கை பார்த்துவிட நினைப்பவர்களின் கவனத்திற்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரர்களின் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழு பேரில் ஒருவரின் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.பண்டிகைக்காலங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு 15 சதவீதம் வரை உயரக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைக்காலம் என்பதால் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிட வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பண்டிகைக்காலங்களில் சுவைமிகுந்த எண்ணெயில் தயார் செய்யப்பட்ட பதார்த்தங்களை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பர்.

ஆனால்,அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நவம்பரில் தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு பின்னர் சீனப் புத்தாண்டு என பண்டிகைகள் வரிசையாக வருகின்றன.எனவே,விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்ந்திருக்க இது ஏற்ற காலமாகவேத் தெரியும்.உணவுக்கட்டுப்பாடு தடைபடும்.

இதுபோன்ற உணவில் குறைந்தது 8 தேக்கரண்டி கொழுப்பு இருக்கும்.எனவே,சரியான உணவைத் தேர்ந்தெடுத்து அளவாக உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உயிர்கொல்லி நோய்களின் பட்டியலில் அவை முதலிடம் வகிக்கும் நெஞ்சுவலி,பக்கவாதம் போன்றவை ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.