சாங்கி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

சாங்கி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
Photo: Changi Airport

 

கிறிஸ்துமஸ் பண்டிகை, சிங்கப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

கிறிஸ்தவர்கள் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சாங்கி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
Photo: Changi Airport

அந்த வகையில், சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், விமான நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அத்துடன், கிறிஸ்துமஸ் மரத்துடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை.. “23 வருட கனவு நினைவானது” – தாம் படித்த கிராமத்துக்கு அன்பு பரிசளித்த ஊழியர்

இது குறித்து சாங்கி விமான நிலையம் (Changi Airport) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் (Terminal 2) புறப்பாடு பகுதியில் (Departure Hall) கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. 7 அடி உயரமுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.