எப்படியெல்லாம் யோசிச்சு கடத்துறானுங்க!! சிங்கப்பூரில் கான்கிரீட் கற்களில் சிகரெட் கடத்தல்!

cigarettes inside concrete seized from lorry at Tuas ICA
cigarettes inside concrete seized from lorry at Tuas ICA

சிங்கப்பூரில் முறைப்படி பணம் செலுத்தாமல், 16 மிகப்பெரிய கான்கிரீட் கற்களில், 12,479 பெட்டிகளில் சிகரெட் கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியேறுதல் மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐ.சி.ஏ) ஆகஸ்ட் 19 திங்கள் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மிகப்பெரிய கடத்தல் பயணம் என்று குறிப்பிட்டுள்ளது.

டாஸ் சோதனைச் சாவடி அருகே, கடந்த ஜூலை 29ம் தேதி காலை 9.05 மணிக்கு வந்த மலேசிய பதிவு எண் கொண்ட லாரியை சோதனை செய்த போது இந்த சிகரெட்டுகள் கண்டறியப்பட்டன.

கான்கிரீட் கற்களை துளையிட்டு பார்த்த போது, சிகரெட்டுகள் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

முறையாக பணம் செலுத்தி இந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்யாததால், S$1,240,430 இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.