சிகரெட்டால் சீரழிந்த வாழ்வு! சிங்கப்பூரில் கம்பி எண்ணப்போகும் ஆடவர் – சம்பவத்தின் பின்னணி!

Singapore duty-unpaid cigarettes arrested
(Photo: Singapore Customs)

சுங்­க­வரி மற்றும் பொருள் சேவை வரி செலுத்தாமல் மோசடி செய்து சிக­ரெட்­டு­களை சேக­ரித்து வைத்­தி­ருந்­த­ குற்றத்திற்காக 63 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு  18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பொதுவாக கப்­பல்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யப்படும் சிக­ரெட்­டு­க­ளுக்கு வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது.

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், கப்­பல்­க­ளுக்கு விற்­ப­தா­கக் கூறி கூடு­த­லாக சுங்க வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை கொள்முதல் செய்தார்.

அதனை முறைகேடாக பெற்று, வெளி இடங்­களில் விற்று வந்­தார். அளவுக்கு அதிகமாக சில சிக­ரெட் பெட்டிகளை சேக­ரித்து வைத்­தி­ருந்­தார்.

கப்­பல்­க­ளுக்குத் தேவை­யான சிக­ரெட்­டு­க­ளை­விட கூடு­த­லாக சிக­ரெட்­டு­களை பல­முறை வாங்­கி­ய­தை சிங்­கப்­பூர் சுங்கத் துறை அறிந்துகொண்டு அறிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சுங்கத் துறை அதி­கா­ரி­கள், அவ­ரது இடத்தை சோத­னை­யிட்­ட­போது வரி செலுத்­தப்­ப­டாத சிக­ரெட்­டு­களைக் கண்­டு­பி­டித்­த­னர்.

சுமார் 14 முறை ஏற்­று­மதி அனு­மதி பெற்று சிக­ரெட்­டு­களை வெளி சந்தையில் விற்றது தெரிய வந்தது.

வரி செலுத்­தப்­ப­டாத சிக­ரெட்டுகளை சேமித்து வைத்த குற்றச் சாட்­டை­யும், வரி ஏய்ப்பு செய்த ஒன்­பது மோசடிக் குற்­றச்­சாட்டுகளை­யும் ஒப்­புக் கொண்­டார். மொத்­தம் பத்து குற்­றச் செயல்களில் 68,000 வெள்­ளிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்­துள்­ளது தெரிய வந்துள்ளது.