Circle Line 6 சுரங்கப்பாதை பணிகள் நிறைவு – 3 புதிய MRT நிலையங்கள்…!

LTA

சிங்கப்பூரில் சர்க்கிள் லைன் 6 (CCL6) என்னும் வட்டப்பாதைக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று புதன்கிழமை (ஜனவரி 12) நிறைவடைந்தன.

இதன் மூலம், பயணிகள் தெலுக் பிளாங்காவிலிருந்து மெரினா பே வரை நேரடிப் பாதையில் பயணம் செய்ய முடியும். உதாரணமாக, சுமார் 10 நிமிட பயண நேரத்தை அதன் மூலம் மிச்சப்படுத்தலாம்.

பாலத்தின்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் எலும்புக்கூடு: இறந்து 6-12 மாதம் இருக்கலாம் – யார் என்றே தெரியாத மர்மம்!

CCL6 விரிவாக்க பாதை, தொடக்கத்தில் திட்டமிட்டதை விட ஒரு வருடம் கூடுதலாக 2026இல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் Spottiswoode, Keppel Road போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற MRT பாதைகளுடன் இணைக்கும் 12 சந்திப்பு நிலையங்கள் உட்பட, சர்க்கிள் லைனில் மொத்தம் 33 நிலையங்கள் இருக்கும்.

மேலும், பிரின்ஸ் எட்வர்ட் சாலையில் இருந்து கண்டோன்மென்ட் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தன, அதாவது 55 சதவீத கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி சாமர்த்தியமாக கடத்தி வந்த தங்கத்தை கண்டறிந்த அதிகாரிகள்!