குடியுரிமை உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பணம் வழங்கப்படும்! – ஆகஸ்ட் முதல் வங்கிக் கணக்குகளில் வரவு

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online
சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த மாதம் $100 வழங்கப்படும்.அரசாங்க மற்றும் தனியார் வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ‘குடும்பப் பயனீட்டு வரவு’ என்ற திட்டத்தின் கீழ் தொகையை பெறும்.
குறைந்தபட்சம் ஒருவரேனும் வீட்டில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருக்கும் குடும்பங்கள் அனைத்தும் இந்த தொகைக்கு தகுதிபெறும்.இந்தப் பணம் அடுத்த மாதம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நிதி அமைச்சகம் தகவல்களை தெரிவித்தது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தால் விலைவாசி உயர்கிறது.இதனால் அன்றாடச் செலவினங்களை சமாளிக்க குறைந்த வருமான குடும்பங்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உதவும் நோக்கத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் $1.5 பில்லியன் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
வீவக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட்ட 9,50,000 குடும்பங்களுக்கு பலனளிக்கும் வகையில் GST பற்றுச் சீட்டும் USAVE திட்டமும் ஏற்கனவே அமலில் இருக்கின்ற நிலையில் இப்போது பணம் கொடுக்கப்படுகிறது என்பதை அமைச்சகம் சுட்டிக் காட்டியது.