மனைவியைத் தாக்கி, 6 மாத மகனை காயப்படுத்தியதாக துப்புரவாளர் மீது குற்றச்சாட்டு..!

Cleaner pleads guilty to assaulting wife and hurting 6-month-old son (Photo: THE NEW PAPER)

தனது ஆறு மாத மகன் ஏற்படுத்திய “சத்தத்தால்” தூங்க முடியாமல் எரிச்சலடைந்த 25 வயதான ஒரு துப்புரவாளர், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தனது குழந்தையை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அன்று பிற்பகல் 3 மணியளவில், குழந்தையை படுக்கையில் வைக்கும்படி மனைவியிடம் கூறியுள்ளார். அதை அவர் மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து குழந்தை அழுவதைக் கேட்ட அந்தப் பெண் வந்து பார்த்தபோது, தன்னுடைய கணவன் பிள்ளையின் கழுத்தில் அழுத்தியபடி மெத்தையில் குழந்தையின் முகம் இருப்பதை கண்டார்.

இதனால் கோபமடைந்த மனைவி தலையிட்டு கேட்ட போது, ​​அந்த நபர் பெண்ணின் (20 வயது) நெற்றியில் தாக்கியுள்ளார்.

திங்களன்று (நவம்பர் 25) நீதிமன்றத்தில் தனது மனைவியைத் தாக்கி, குழந்தைக்கு இந்த மோசமான செயலைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்க நீதிமன்றம் அவர்களின் பெயரை வெளியிடவில்லை.

துப்புரவாளர், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் கணவனின் சகோதரர் மற்றும் பெண்ணின் சகோதரியுடன் புங்க்கோல் பிளாட்டில் வசித்து வருவதாக நீதிமன்றம் தகவல் அறிந்தது.

இந்த மோசமான செயல் மூலம் காயத்தை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை மற்றும் 5,000 டாலர் வரை அபராதம் விதிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

தாக்குதல் குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறை, 5,000 டாலர் வரை அபராதம் விதிக்கலாம்.

Source : Straits Times