கனமழை: கிளமென்டி சாலை கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீர் – கடும் அவதியை சந்தித்த கடைக்காரர்கள்

Flooding at Clementi Road halts shophouse businesses' operations for more than 2 hour
Shin Min and Google Maps

கனமழையால் கிளமென்டி சாலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்குள்ள ஏழு உணவு மற்றும் பான கடைகள் பாதிப்புக்குள்ளானது.

நேற்று முன்தினம் பிப். 2 ஆம் தேதி மதியம் மழைநீர் அதிக அளவில் தேங்கியதை அடுத்து, அங்கு சுமார் இரண்டு மணிநேரங்களுக்கு வர்த்தக செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடலில் அதிகாலையில் கிடந்த சடலம்: இறந்தது உறுதி

ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், அந்த பகுதியில் உள்ள கடை ஒன்று முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதை காண முடிந்தது.

அதாவது வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில்… 10செ.மீட்டர் உயரத்துக்கு மழைநீர் தேங்கி இருந்ததாக தெரிவித்தார்.

மழை காரணமாக அதே நாளில் சிங்கப்பூரில் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது, இதனை சில வீடியோக்கள் மூலம் காண முடிந்தது.

பிப்.2 அன்று வெளியிடப்பட்ட டிக்டாக் வீடியோ ஒன்றில், பாண்டன் ரோடு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் காண முடிந்தது.

Toto Hong Bao குலுக்கல்: S$12 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய 3 பேர்!