“எங்களுக்கும் பசிக்கும்ல” – சிங்கப்பூரின் HDB அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு கும்பலாக வந்து செல்லும் குரங்குகள்

clementi-monkeys-hdb-mess

சிங்கப்பூரின் Clementi பகுதியில் உள்ள சில கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு குரங்குகள் தினசரி தரிசனமளித்து வருகின்றன.அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கும்பலாக குரங்குகள் சென்று வரும் காணொளி சமீபத்தில் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டது.அந்தக் காணொளியில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இறங்குவதைக் காணமுடிகிறது.

முதல் மாடியில் இரண்டு குரங்குகள் இருக்கின்ற நிலையில் 5-ஆவது மாடியிலுள்ள வீட்டின் சன்னலிலிருந்து 5 குரங்குகள் வெளியேறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.கட்டிடத்தின் மதில் வழியே குரங்குகள் இறங்குகின்றன.குரங்குக் கூட்டம் கடந்த 6 மாதங்களாகவே குடியிருப்புக்கு வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உணவிற்காக அவைகள் வீடுகளுக்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது.Holland-Bukit Panjang நகர மன்றம் குரங்குகள் தொடர்பான புகார்கள் கடந்த ஒரு வருடத்தில் சாராசரியாக மாதத்திற்கு ஒரு புகார் வந்ததாக கூறியது.குரங்குகளின் சேட்டையைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் தேசியப் பூங்கா கழகத்துடனும் ACRES அமைப்புடனும் இணைந்து செயல்படுவதாக மன்றம் தெரிவித்தது.

குடியிருப்புவாசிகள் அவர்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படியும் வீட்டின் சன்னல் மற்றும் கதவுகளை மூடிவைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.அடிக்கடி குரங்குகள் வருவதால் குடியிருப்பாளர்கள் அவற்றை கண்கானித்துக் கொண்டேயிருக்கின்றனர்.