பருவநிலை தொடர்பான திட்டங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு!

Photo: Euromoney

 

சிங்கப்பூர் நாணய ஆணையம் (Monetary Authority Of Singapore – ‘MAS’) பருவநிலை முதலீடு தொடர்பான திட்டங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை (சிங்கப்பூர் டாலர் 2.4 பில்லியன்), அதன் சார்ந்த ஐந்து முதலீட்டு நிர்வாக அமைப்புகளிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“இந்த நிதிகள் அதன் பசுமை முதலீட்டு திட்டத்தின் (Green Investments Programme- GIP) கீழ் பெயர்கள் வெளியிடப்படாத ஐந்து சொத்து மேலாளர்கள், பருவநிலை மாற்றம் (Climate Change) மற்றும் சுற்றுச்சூழலை (Environment) மையமாகக் கொண்ட புதிய பங்கு மற்றும் நிலையான வருமான ஆணைகளை நிர்வகிப்பார்கள். பருவநிலை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், சிங்கப்பூருக்கு நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட சொத்து மேலாளர்களை ஈர்ப்பதற்கும், ஆசியாவிலும், அதற்கு அப்பாலும் சுற்றுச்சூழல் நிலையானத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை ஊக்குவிக்கவும் பசுமை முதலீட்டு திட்டம் உதவும்.

 

சிங்கப்பூரில் ஆசியா- பசிபிக் நிலைத்தன்மை மையங்களை (Sustainabilty Hubs) அமைத்து புதிய சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக கருப்பொருள் பிராந்திய நிதிகளையும் (Environmental, Social and Governance Thematic Regional Funds- ESG) அவர்கள் தொடங்குவார்கள். இது ஒரு ஆரம்பம்; இன்னும் வர இருக்கிறது. வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் சொத்து மேலாளர்கள் பருவநிலை வெளிப்பாடுகள் குறித்து இந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் இந்தத் துறையை ஒரு சர்வதேச தரத்திற்கு சீரமைக்க ஆலோசனை செய்யும். தரவு என்பது பசுமை நிதிக்கு மிகப்பெரிய சவால் மற்றும் மிகப்பெரிய தடையாகும். இது அர்த்தமுள்ள வெளிப்பாடுகளுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது” என சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்தார்.