சட்டத்திற்கு புறம்பான முறையில் மருந்து விநியோகம்: லிட்டில் இந்தியா வட்டார மெடிக்கல் நிர்வாகிக்கு 48 வாரம் சிறை!

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள 2 மருந்தகங்களின் தலைமை நிர்வாகியான சான் வெங் வா (Chan Weng Wah) என்பவர் சட்டத்திற்கு புறம்பாக 813.2 லிட்டர் இருமல் மருந்தையும் மற்றும் 4,200 தூக்க மாத்திரைகளையும் கடந்த 2018 ஜூலை மற்றும் 2019 டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் விநியோகம் செய்துள்ளார்.

அவர் விநியோகம் மருந்துகள் போதைப் பழக்கமுடையவர்களுக்கு மறுவிற்பனை செய்யப்படும் என தெரிந்தே அவர் இந்தக் குற்றத்தை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர், வீராசாமி சாலையில் உள்ள ஹெல்த்லிங்க் மற்றும் ஹெல்த்குரூப் ஆகிய மருந்தகத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹெல்த்லிங்க் மருந்தகத்தின் இயக்குநராக இருத்ததாக கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆவணங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல், ஹெல்த்குரூப் மருதகத்தின் பங்குதாரரில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் விலகியதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரை சேர்ந்த சான் வெங் வா மருத்தவர் இல்லை என்பதால் மருந்துகளை கொடுக்க இவருக்கு அனுமதியில்லை. சட்டவிரோத விநியோகம் மூலம் இவர் குறைந்தபட்சமாக சுமார் $83,959 லாபம் ஈட்டியுள்ளார். சுகாதாரப் பொருள்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளை சான் வெங் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றத்தில் 48 வார சிறைத் தண்டனையும் மற்றும் S$20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், சான் வெங்கிருக்கு தண்டனை விதித்தபோது இதர 38 குற்றச்சாட்டுகலும் கவனத்தில் கொள்ளப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 வாரங்களை அவர் சிறையில் கழிக்க வேண்டும்.

தூக்க மாத்திரைகளை விநியோகித்த சானின் செயல்கள் கடுமையானவை என்றும், டோர்மிகம் எனப்படும் மாத்திரைகள் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடியவை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வெளிநாட்டு ஆடவருக்கு மரண தண்டனை!