அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பயணத் திட்டம் குறித்த விரிவான தகவல்!

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பயணத் திட்டம் குறித்த விரிவான தகவல்!
Photo: TN Govt

 

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 22) முதல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வேலைக்கு ஆட்கள் தேவை: சம்பளம் S$27000.. சில நிபந்தனைகளுடன் ஆள் தேடும் முதலாளி

அவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (மே 23) காலை 11.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவருக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழ் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்- இந்தியா தொழில் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 350 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இதில் தமிழக அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. மேலும், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமியையும் சந்தித்துப் பேசுகிறார்.

வெளிநாட்டு ஆடவரை காணவில்லை: கடைசியாக பொது மருத்துவமனையின் இருந்தார் – ஷேர் செய்து உதவுங்கள்

அதைத் தொடர்ந்து, மே 26- ஆம் தேதி அன்று ஜப்பான் செல்லும் தமிழக முதலமைச்சர், பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கிறார்.

சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் மே 31- ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.