4 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் – 100க்கும் மேற்பட்ட போதை ஆசாமிகள் கைது !

cnb arrest

ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை நாடளவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனையில், போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேரைக் கைது செய்துள்ளது மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவான CNB. S$470,000 சந்தை மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. CNB இன் இந்த தேடுதல் வேட்டை பூண் லே, சாங்கி, செங்காங் மற்றும் தோவா பயோ போன்ற பகுதிகளில் நடந்தது.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள்:-

  • 194 கிராம் ஹெராயின்
  • 657 கிராம் ஐஸ்
  • 9,339 கிராம் கஞ்சா
  • 104 கிராம் கெட்டமைன்
  • 7 கிராம் மனநோய் மாத்திரைகள்
  • 236 கிராம் “Ecstasy” மாத்திரைகள்
  • ஒரு Erimin-5 மாத்திரை
  • ஒரு LSD மற்றும்
  • ஆறு பாட்டில் GHB திரவம்

மேலும் கைப்பற்றப்பட்ட 9,339 கிராம் கஞ்சா, சுமார் 1,330 துஷ்பிரயோகம் செய்பவர்களின் போதை அடிமைக்கு ஒரு வாரத்திற்கு கொடுக்க முடியும் என்று CNB தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ், ஒரு நபர் சிங்கப்பூரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் சார்பாகவோ அல்லது வேறு எந்த நபரின் சார்பாகவோ கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்துவது குற்றமாகும்.  கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களுக்கு போக்குவரத்துக்கு வழங்குதல் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களை கடத்துவதற்கு உதவுதல் அல்லது செய்ய முன்வருதல் என எவ்வாறாயினும் குற்றமாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

ஒரு நபர் 15 கிராம் தூய ஹெராயின் (டயமார்ஃபின்), 250 கிராம் மெத்தாம்பேட்டமைன் அல்லது 500 கிராம் கஞ்சாவை கடத்தியதாகக் கண்டறியப்பட்டால், அவர் கட்டாயம் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.