போதைப்பொருளுடன் சிக்கிய 6 பேர் – இருவர் வெளிநாட்டினர்

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 26 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 7 ஆம் தேதிகளில் CNB மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்

ஹெண்டர்சன் சாலையில் 5 பேரும், சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டில் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களில் 4 பேர் சிங்கப்பூரர்கள், இருவர் வெளிநாட்டினர்.

மொத்தம் சுமார் 2,280 கிராம் கஞ்சா, 104 கிராம் கெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு S$85,000 ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுகின்றன.

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட சாதனங்கள் விற்பனை: 17 பேர் கைது