சிங்கப்பூரில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்

CNB seizes drugs worth almost S$1.7 million
(Photo Credit: Cheryl Lin via CNA)

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) சுமார் S$1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது.

இதில் 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, சுமார் 14 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று அது (மார்ச் 18) தெரிவித்துள்ளது.

வங்கி ATM அட்டை இனி வேண்டாம் – முகத்தை ஸ்கேன் செய்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம்!

சிங்கப்பூரில் பல இடங்களில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை நடந்தது.

இதில் சுமார் 20,509 கிராம் கஞ்சா, 8,296 கிராம் ஹெராயின் மற்றும் 6,439 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அளவு 35 கிலோவுக்கு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையில் 27 முதல் 33 வயதுக்குட்பட்ட மூன்று சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 16, கெம்பாஸ் (Kempas) ரோடு அருகே அதிகாரிகள் வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அதில் போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, மெக்நாயர் ரோடு அருகே 30 வயது ஆடவரை CNB அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பணிப்பெண்ணை துன்புறுத்திய பெண்ணுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை