காதுக்குள் சென்ற கரப்பான் பூச்சியை மவுத்வாஷால் கொன்ற சிங்கப்பூர் பெண்மணி – இது பாதுகாப்பானதா ? துண்டுதுண்டாக வெளியே எடுத்த மருத்துவர்

cockroach enter in singapore woman ear mouthwash not safe
சிங்கப்பூரில் பெண் ஒருவர் அவரது அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது அவரது காதுக்குள் கரப்பான்பூச்சி நுழைந்து விட்டது.அந்தப் பெண் உறங்கும்போது காதுக்கு அருகில் கரப்பான்பூச்சி இருப்பதை உணர்ந்தவுடன் பயத்தில் மிகவும் கடினமாகத் தாக்கியுள்ளார்.ஆனால் அப்போதுதான் கரப்பான்பூச்சி தப்பிக்க முயன்று அவர் காதுக்குள் ஊர்ந்து சென்றது.

முழுமையாக வளராத அந்த கரப்பான் சுமார் 3.5 செமீ முதல் 4 செமீ வரை நீளம் கொண்டது என்று தெரிவித்தார்.காதுக்குள் தன் விரல்களை விட்டு பூச்சியை அகற்ற முயன்றும்,முடியாததால் ,அந்தப் பெண் அலறினார்.பூச்சி காதுக்குள் ஊர்வதை உணர முடிவதால்,அந்த உணர்வு அருவருப்பாகவும் அசௌகரியமாகவும் இருப்பதாகக் கூறினார்.

படுக்கையிலிருந்து எழுந்து கழிப்பறைக்கு சென்ற பெண் அங்கிருந்த மவுத்வாஷை காதில் ஊற்றினார்.இது பாதுகாப்பானது இல்லை எனினும் அவர் முயன்றார்.திரவத்தில் ஊறிய கரப்பான் செத்துவிட்டது.பின்னர் அதை வெளியே எடுக்க முயன்ற போது கரப்பான் இரண்டாக உடைந்தது.காதின் ஆழத்தில் புதைந்து விட்டதை உணர்ந்த பெண் உடனடியாக அவரது அம்மாவை அழைத்தாள்.

அரை மணிநேரத்திற்கு பின்னர் அங்கு வந்த அவளது அம்மா மற்றும் செவிலியர்கள் அவரைக் கண்டு சிரித்தனர்.பிரத்யேக கருவிகளின் துணை கொண்டு காதிலிருந்த கரப்பானை துண்டுதுண்டாக டாக்டர் அகற்றினார் என்று கூறினார்.