திறந்த வகைக்கான COE பிரீமியம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வு – COE வரலாற்றில் புது சாதனை !

cars coe singapore

சிங்கப்பூரில் புதிய வாகனத்தைப் பதிவு செய்ய விரும்பும் எவரும் முதலில் உரிமைச் சான்றிதழை (COE) பெற வேண்டும். ஒரு COE என்பது வாகன உரிமை மற்றும் 10 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட சாலை இடத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைக் குறிக்கிறது. இதில் பல வகைகள் உண்டு. அவற்றுள் Open Category COEக்கள் எந்த வகையான வாகனத்திற்கும் பயன்படுத்தலாம், ஆனால் பொதுவாக அவை பெரிய கார்களுக்கு பயன்படுத்தப்படும். ஜூலை 20, 2022 அன்று Open Categoryக்கான COE பிரீமியம் இதுவரை இல்லாத அளவாக S$114,001ஐ எட்டியது. ஜூலை 6 அன்று நடந்த கடைசி ஏலத்தில் இருந்த S$110,524 என்ற சாதனையை முறியடித்தது.

28 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 1994 இல் இருந்த S$110,500 முந்தைய சாதனையை முறியடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையாக ஜூலை 6 இருந்தது. ஜூன் 8, 2022 அன்று Category B மற்றும் Open Category S$100,000ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய ஏலத்தில் மற்ற எல்லா வகைகளுக்குமான பிரீமியங்கள் அதிகரித்துள்ளது:

  • Category A கார்களுக்கான COEக்கள் S$78,001 இலிருந்து S$78,899 ஆக உயர்ந்துள்ளது.
  • Category B கார்களுக்கான COEக்கள் S$107,800 இலிருந்து S$110,003 ஆக உயர்ந்துள்ளது.
  • மோட்டார்சைக்கிள்களுக்கான COEக்கள் S$10,889 இலிருந்து S$10,910 ஆக உயர்ந்துள்ளது.
  • வணிக வாகனங்களுக்கான COEக்கள் S$54,001 இலிருந்து S$54,889 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் ஒதுக்கப்பட்ட 2,012 COEக்களுக்கு 2,750 ஏலங்கள் பெறப்பட்டுள்ளது.