‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம் (Air India). இந்த வழித்தடத்தில் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

இனி இந்தத் தவறை செய்யாதீர்கள்! – சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை

கோவையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு ஒரு விமான சேவையையும், கோவையில் இருந்து சென்னை மற்றும் டெல்லி வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமான சேவையையும் வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.