சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A320 ரக விமானத்தை இயக்கி வருகிறது.
விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கோவை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 10,616 ரூபாயாகவும், அதிகபட்சமாக 11,561.79 ரூபாய் ஆகவும், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ரூபாய் 11,001 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://beta.makeabooking.flyscoot.com/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.