கோவை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம் – பயணிகள் மகிழ்ச்சி!

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்குமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது, தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

கோவை-சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு இரவு 10.45 மணிக்கு வந்து சேரும்.

பணத்தை காவலர்கள் திருடியதாக போலி நாடகம்: “வினேஷ் குமார் கணேசன்” என்பவருக்கு அபராதம், சிறை

அதே போல, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இரவு 11. 45 புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் நேரடியாக கோவை வருபவர்கள் மட்டுமே சிங்கப்பூரிலிருந்து பயணிக்க முடியும்.

சிங்கப்பூரில் இருந்து கோவை செல்ல இடைவழி (transit) பயணிகளுக்கு அனுமதி இல்லை. சிங்கப்பூரில் உள்ளவர்கள் மட்டுமே கோவை வர முடியும்.

வாரத்தில் மூண்டு நாள், அதாவது புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும்.

டிசம்பர் மாத இறுதியில் நேரடி விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் எஸ். செந்தில் வளவன் முன்னர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பட்ஜெட் விமான நிறுவனமான “ஸ்கூட் ஏர்லைன்ஸ்” கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கும் என்று அவர் முன்னர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மரணம்: இந்திய ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு – முழு தகவல்