தீபாவளி திருநாளில் நடைபெற்ற நெகிழ்வான சம்பவம்!

Photo: Coimbatore College of Technology Alumni Association in Singapore

கடந்த ஆண்டு ஆரம்பித்த கோவிட்-19 தொற்று பரவலையடுத்து, பல்வேறு நாடுகளில் பல மகிழ்வான நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்து, வெறும் கவலையும், துயரமுமே அனைவரையும் சூழ்ந்திருந்தது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில் தான் துயரங்கள் குறைந்து, சில சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்று மக்களின் முகங்களில் மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூரில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!

அந்த வகையில் அண்மையில் நடைப்பெற்ற தீபாவளித் திருநாளையொட்டி, அதற்கு முதல் நாள் சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு, சிங்கப்பூரில் உள்ள கோவை தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மதிய உணவாக பிரியாணியை வழங்கியுள்ளது.

மேலும் தீபாவளியன்று கோவை தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், அங்குள்ள ஸ்ரீ நாராயண மிஷன் செயல்படுத்தும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு இரவு வேளை உணவையும் வழங்கினர்.

இச்செயல்களின் மூலம், இந்த வருட தீபாவளி திருநாளன்று பலருக்கும் மனதார உதவி செய்தது ஒருவித மகிழ்ச்சியை மனதில் ஏற்படுத்துகிறது என்று அச்சங்கத்தினர்கள், தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

கோவை தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை, தீபாவளித் திருநாளுக்கு முன்தினம் ஏறக்குறைய நூறு வெளிநாட்டு ஊழியர்களுக்கு நண்பகல் உணவாக பிரியாணி வழங்கி கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்து கொண்டது.

சிங்கப்பூரில் உள்ள இதுபோன்ற அமைப்புகள் மற்றும் சங்கங்கள் எளியோருக்கு பல உதவிகளையும், சேவைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்கள், மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள அறிவிப்பு!