ComfortDelGro டாக்ஸி, கிராப் ஃபுட் மிதிவண்டி மோதி விபத்து: ஊழியருக்கு காயம்

comfort-grab-accident-in-yishun
Beh Chia Lor/Facebook, Google Maps

ComfortDelGro டாக்ஸி மற்றும் கிராப் ஃபுட் டெலிவரி ஓட்டுனரின் மின் மிதிவண்டி ஆகியவை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து பிளாக் 846 யுஷுன் ரிங் ரோடுக்கு அருகில் கடந்த செப்.4 அன்று மதிய நேரம் 2:55 மணிக்கு நிகழ்ந்தது.

விபத்து தொடர்பான புகைப்படங்கள் Beh Chia Lor மற்றும் GrabFood Delivery Rider Singapore ஆகிய Facebook குழுக்களில் வெளியானது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் இந்த விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

இதில் 61 வயதுடைய ஓட்டுனருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட டாக்ஸி ஓட்டுனருக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்ல முடியாது – விசா அனுமதியை நீக்கிய நாடு