காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ருவாண்டாவுக்கு சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர்!

Pm lee leave speech
Pic: MCI/Fyrol

காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ருவாண்டா நாட்டின் தலைநகரான கிகாலிக்கு (Kigali) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜூன் 26- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஜூன் 23- ஆம் தேதி அன்று ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (Commonwealth Foreign Affairs Ministers’ Meeting- ‘CFAMM’) கலந்துக் கொள்கிறார்.

காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்திற்கு (Commonwealth Heads of Government Meeting- ‘CHOGM’) முன்னதாக ஜூன் 24- ஆம் தேதி முதல் ஜூன் 25- ஆம் தேதி வரை பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொள்கிறார். இதற்காக, அவர் ருவாண்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சர்கள் காமன்வெல்த்தின் வளர்ச்சிகளை மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு கவலையளிக்கும் பிரச்சினைகள், நிலையான வளர்ச்சி மற்றும் கோவிட்-19- க்கு பிந்தைய வளர்ச்சி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? – சிங்கப்பூரில் இப்படியெல்லாமா நடக்குது!!

காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். இந்த சுற்றுப்பயணத்தின் போது, பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தின் உயரதிகாரிகள், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக, இக்கூட்டம் இரு­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. கடை­சி­யாக 2018- ஆம் ஆண்டு பிரிட்­ட­னில் நடை­பெற்ற இந்­தச் சந்­திப்பி­லும் பிர­த­மர் லீ சியன் லூங் கலந்­து­க் கொண்­டார் என்பது குறிப்பிடத்தக்கது.