54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் சந்திப்பு – பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் எங்கு செல்கின்றனர்

PM Lee Ramadan Tamil Puthandu
(PHOTO: MCI)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்,இன்று (ஜூன்23) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் (ஜூன் 27) வரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் தலைநகர் கிகாலிக்கு பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்கிறார்.இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.

இன்று நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் லீ கலந்து கொள்வார்.இந்த சந்திப்பு நிகழ்வானது இன்று தொடங்கி நாளை மறுநாள் வரை நடைபெறும்.ருவாண்டா அதிபர் பால் ககாமேவை பிரதமர் லீ சந்திப்பார்.இருநாட்டுத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்பானது கிகாலியில் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் நடைபெறும்.

பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறும்.ஆனால் இம்முறை கோவிட்-19 தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

பெருந்தொற்று காரணமாக தலைவர்கள் சந்திப்பு இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.கடைசியாக பிரிட்டனில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பிலும் பிரதமர் லீ கலந்து கொண்டார்.இம்முறை நடைபெறும் சந்திப்பில் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.பிற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் லீ சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் ருவாண்டாவுக்குச் செல்கின்றனர்.துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் ஒங்,இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை சிங்கப்பூரின் தற்காலிகப் பிரதமராக பதவி வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

காமன்வெல்த் தலைவர்கள் சந்திப்பில் அரசாங்க அதிகாரிகள் ,தொழிலதிபர்கள் உட்பட 5000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று